அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அகல இருந்தால் நிகள உறவு , கிட்டவந்தால் முட்டப் பகை. அகல இருந்தால் பகையும் உறவாம். அகல உழுகிறதை விட ஆழ உழு. அகல் வட்டம் பகல் மழை. அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால் , அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன். அக்காடு வெட்டி பஞ்சு விளைந்தால் என்றால் எனக்கொரு வேட்டி , உனக்கொரு வேட்டி என்றார்களாம். அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு. அகவிலை அறியாதவன் துக்கம் அறியான். அசைந்து தின்கிறது யானை , அசையாமல் தின்கிறது வீடு. அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான். அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா ?அடக்கமே பெண்ணுக்கு அழகு. அடக்கம் உடையார் அறிஞர் , அடங்காதவர் கல்லார். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு. அடாது செய்தவன் படாது படுவான். அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார் அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும். அடியாத மாடு படியாது. அடிக்கிற கைதான் அணைக்கும்! அடி மேல் அடி விழுந்தால் (வைத்தால்) அம்மியும் நகரும். அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம். அணில் கொப்பிலும் , ஆமை கிணற்றிலும். அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது. அகத்துக்காரன் அடித்தானோ , கண் புளிச்சை போச்சோ ! அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே. அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான் இது 'அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான் ' என்பதன் திரிந்த வழக்கு அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான் அண்டை வீட்டில் நடப்பவைகளைப் பார்த்தும் ஒட்டுக்கேட்டும் கோள் சொல்லும் பழக்கம் உள்ளவன் சண்டையை மூட்டுவான் என்பதை பொருள். அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம். அதிகாரம் படைத்தவன் தம்பி சண்டபிரசண்டனாம். அதிருஷ்ட்டம் வந்தால் கூரையை கிழித்துக்கொண்டு கொட்டுமாம்!.. அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு. அந்தி மழை அழுதாலும் விடாது. அப்பன் அருமை மாண்டால் தெரியும். அப்பியாச வித்தைக்கு அழிவில்லை. அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன். அயலூரானுக்கு ஆற்றோரம் பயம் , உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம். அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி. அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர். அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல. அரும இல்லாத வூட்ல எருமயும் குடியிருக்காது. இது 'அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல ' என்பதன் திரிந்த வழக்கு அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல - குழந்தை வேண்டும் பெண்கள் அரச மரத்தினைச் சுற்றிவந்தால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடைய பெண் கணவனோடு கூடி இல்லறம் நடத்தாவிட்டால் குழந்தை பிறக்காது என்பதே கருத்து.அரசு அன்று கொல்லும் , தெய்வம் நின்று கொல்லும். அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிற்றை தொட்டுப் பார்த்துக் கொண்டாளாம். அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும். அரித்தால் அவந்தான் சொரிந்துகொள்ளவேண்டும். அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது. அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது. (அரைக்காசுக்கு போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது) அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும் , ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும். அரைக் குத்தரிசி அன்னதானம் , விடிய விடிய மேளதாளம். அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும். அலை எப்பொழுது ஓய்வது தலை எப்பொழுது முழுகுவது ?அல்லல் ஒரு காலம் , செல்வம் ஒரு காலம். அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும். அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு. அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது. அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார். அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள். அவள் பெயர் கூந்தலழகி அவள் தலை மொட்டை. அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது. அவனவன் செய்த வினை அவனவனுக்கு. அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா! அவிசாரி என்று ஆனை மேல் போகலாம் , திருடி என்று தெரு மேல் போக முடியுமா ?அவிட்டக்காரி வீட்டு தவிட்டுப் பானையெல்லாம் தனமாம். அழக் கொண்ட எல்லாம் அழப் போகும். அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும். அழச் சொல்லுவார் தமர் , சிரிக்கச் சொல்லுவார் பிறர். அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன , கழுதை மேய்ந்தாலென்ன ?அழிவழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன். அழுத பிள்ளை பால் குடிக்கும். அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும். அளகாபுரிக் கொள்ளையானாலும் அதிருட்டம் கெட்டவனுக்கு ஒன்றுமில்லை. அளகேசனாகவே இருந்தாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும். அளக்கிற நாழி அகவிலை அறியுமா ?அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. அள்ளாதது குறையாது , சொல்லாதது பிறவாது. அள்ளிக் கொடுத்தால் சும்மா , அளந்து கொடுத்தால் கடன். அள்ளி முடிஞ்சா கொண்டை , அவுத்துப் போட்டா சவுரி அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன. அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை. அறச் செட்டு முழு நட்டம். அறப்படித்தவன் அங்காடி போனால் , விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான். அறமுறுக்கினால் அற்றுப் போகும். அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும். அறிய அறியக் கெடுவார் உண்டா ?அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம். அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம். அறிவீனனிடம் புத்தி கேட்காதே. அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை. அறிவுடையாரை அரசனும் விரும்புவான். அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம். அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும் , அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும். அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி. அறுக்கமாட்டாதவன் இடுப்பில் ஆயிரத்துஎட்டு அறிவாளாம்! அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும் ?அற்ப அறிவு அல்லலுக்கு இடம். அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும். அற்ப சகவாசம் பிராண சங்கடம். அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான். அற்றது பற்றெனில் உற்றது வீடு. அன்பான நண்பனை ஆபத்தில் அறி. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள் ?அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும். அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா ?அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம். அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான். அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் அன்னையைப் போலொரு தெய்வமும் உண்டோ அவர் அடி தொழமறுப்போர் மனிதரில்லை அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா ?அல்லற்ற வீட்டில் பல்லியும் சேராது.
Post a Comment